Close
மே 17, 2024 3:41 காலை

கொலை வெறித்தாக்குதலுக்குள்ளான பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி செய்தியாளருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு

முதலமைச்சர் ஸ்டாலின்

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு  பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவத்துக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சிகிச்சை பெற்று வரும் செய்தியாளருக்கு பத்திரிகையாளர் நல வாரியம் மூலம் ரூ. 3 லட்சம் நிவாரணநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு, புதன்கிழமை (24-01-2023) இரவு அவரது வீட்டின் அருகிலேயே சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி அவர் தற்போது கோவை கங்கா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துடன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் நேசபிரபுவுக்கு, பத்திரிகையாளர் நலவாரியத்தின் மூலம் ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

செய்தியாளர் அளித்த புகார்களுக்கு  போதிய கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்த சம்பவம் நடந்த பகுதியின் காவல்ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்க கோவை மண்டல ஐஜி உத்தவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவத்தில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீஸார் விசாரணை செய்து வருவதாகவும், விரைவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top