Close
மே 17, 2024 3:24 காலை

பொன்னமராவதி அருகே செவலூரில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

செவலூர் ஊராட்சியில் மருத்துவமுகாமை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம  மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்  மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி   (08.03.2023) துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்துப் பெட்டகங்களை வழங்கி, கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:  முத்தமிழறிஞர் கலைஞர்  ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பொதுமக்களுக்கும் உயர்தரத்திலான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவத்துறையின் மூலம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்குத் தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அவர்களின் பகுதிக்கே வந்து செயல் படுத்தப்படுகின்றன.

இதன்மூலம் பல்வேறு நோய்கள் ஆரம்ப நிலையிலேயே உரிய பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

மேலும் ஏழை, எளிய பொதுமக்களுக்கும் உயர் தரத்திலான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞரால்  காப்பீட்டுத் திட்டம் தொடங்கப் பட்டு, மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினும்  பொதுமக் களுக்கு உயர் தரத்திலான சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தை புதுப்பொலி வுடன் செயல்படுத்தி வருகிறார்.

இதன்மூலம் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

இம்முகாம்களில் மருத்துவ குழுவினர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களை பல்வேறு நோய் களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே  மக்களுக்காக நடத்தப்படும் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை அனைத்து மக்களும் பயன்படுத்திக்கொண்டு, ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டறிந்து அவற்றிற்கு முறையான சிகிச்சை மேற்கொள்வதற்காக  இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி .

இந்நிகழ்வில், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர்  சுதா அடைக்கலமணி, உதவி ஆணையர் (கலால்)  எம்.மாரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.இராம்கணேஷ், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்  தங்காஜ், ஊராட்சிமன்றத் தலைவர் திவ்யா முத்துக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top