Close
மே 17, 2024 2:06 காலை

அலமாரியிலிருந்து புத்தகம்.. மிர்தாத் புத்தகம்…

அயலகத்தமிழர்கள்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

மிர்தாதின் புத்தகம் – வாசித்தலுக்கு முன்பான பார்வை..,

இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசியாருக்கெல்லாம் உண்டோஅவர்களெல்லோரும் தமதுகூடைகளை ஏந்தி வாருங்கள்”- மிர்தாத் அழைக்கிறார்.

இந்தப் பசி இந்த நாள் வரை எனக்கு இருந்தது இல்லை. தமிழில் கிடைக்கும் கனிகளை ருசித்து பார்க்கவே ஆயுள் போதாது என்று நினைத்ததுஒரு காரணம், மிர்தாதின் புத்தகம், பல முறை தேடிக் கிடைக்காமல் போனதும் இன்னொரு காரணம்,

தமிழில் வரும் ஆன்மீக புத்தகங்களை படித்து புரிந்து தெளிவடையவே நான் சிரமப்படுகிறேன். இதில் மிர்தாதின் புத்தகத்தை எப்படி படிக்க முடியும். மிகையில் நைமி வேறு…, “எனது இந்த படைப்பு படிக்க முடியாதது” என்று பயமுறுத்து கிறார்.

சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம் படித்திருக்கிறேன் என்கிற யோக்கியதை, இந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவதற்கு போதுமான தைரியத்தை தந்திருக்கிறது.

மிகையில் நைமி, கலீல் ஜிப்ரானின் நெருங்கிய நண்பர் என்கிறார்கள். மிர்தாதின் புத்தகத்தை நீட்ஷேவின் “ஜராதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்” என்கிற புத்தகத்துடன் ஒப்பிட முடியும் என்கிறார்கள். ஆக கிப்ரானையும், நீட்ஷேவையும் முழுக்க வாசித்திருக்கிறேன் என்பதால், mystical text என்கிற வகைக்குள் வருகிற இந்த மிர்தாதின் புத்தகத்தை வாசிப்பதில் சிரமம் இருக்காது என நினைக்கிறேன்.

“If this rascal would not have written this book, I would have written this” அதாவதுஇந்த அயோக்கியப் பயல், இதை எழுதி இருக்கா விட்டால், இதை நான் எழுதியிருப்பேன் என செல்லமாக சொல்கிறார் ஓஷோ. கூடவே “உலகில் மில்லியன் கணக்கான புத்தகங்கள் உள்ளன, ஆனால் ‘மிர்தாத் புத்தகம்’ தற்போது உள்ள எல்லா புத்தகத்தையும் விட மேலோங்கி நிற்கிறது.” என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

எனது தோழமைகள் சிலர் மிர்தாதின் புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா?! இல்லையெனில் கண்டிப்பாக வாசியுங்கள் என்கிறார்கள்.

இத்தனை பரிந்துரைகளையும் பார்வையையும் பார்த்துவிட்டு மிர்தாதின் புத்தகத்தை வாசிக்காமல் விட்டால் எப்படி!!இதோ தொடங்கி விட்டேன்.படித்து முடித்தவுடன் எனது பார்வையை பகிர்கிறேன்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top