Close
மே 18, 2024 4:33 காலை

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேர்ணாம்பட்டு நகராட்சி உறுப்பினர் தர்ணா போராட்டம்

வேலூர்

வேலூர் மாவட்டம்ஸ பேர்ணாம்பட்டு நகராட்சியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மமக உறுப்பினர்

பேர்ணாம்பட்டு நகராட்சி, 9 -ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாததைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி  நகர்மன்ற உறுப்பினர் ஆலியார் சுல்தான் அஹ்மத் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான பழுதடைந்த குடிநீர் குழாய் சீர்செய்தல், கழிவுநீர் கால்வாயை தூய்மைப்படுத்து தல், தெரு மின்விளக்கு சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை ஏதும் செய்யாமல் கால தாழ்த்தி வரும் நகராட்சியை கண்டித்தும்,

மேலும் பொதுமக்களிடம் தரக்குறைவாக பேசி வரும் நகராட்சி ஊழியர் பாலாஜியை இடமாற்றம் செய்ய கோரியும், பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு மமக கவுன்சிலர் ஆலியார் சுல்தான் அஹ்மத் தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு போலீஸார் மற்றும் நகராட்சி  துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹ்மத்  விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அடிப்படை வசதிகளான அனைத்தும் பணிகளை யும் ஒரிரு நாட்களில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த நிலையில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து முடிக்காத பட்சத்தில் வார்டு பொதுமக்களோடு மாபெரும் பேராட்டத்தை நடத்த போவதாக நகர்மன்ற உறுப்பினர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இந்த போராட்டம் காரணமாக நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

…வேலூர் –  நிருபர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top