Close
மே 20, 2024 12:05 மணி

புதுக்கோட்டையில் வாசகர் பேரவை நடத்திய அகிலன் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வாசகர் பேரவை நடத்திய அகிலன் நூற்றாண்டுவிழா ஜெ.ஜெ.கலை கல்லூரியில் நடந்தது

புதுக்கோட்டையில் வாசகர் பேரவை நடத்திய அகிலன் நூற்றாண்டுவிழா ஜெ.ஜெ.கலை  கல்லூரியில் நடந்தது
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை – கலை அருவி இலக்கியப் பேரவை,  புதுக்கோட்டை வாசகர் பேரவை  இணைந்து நடத்திய அகிலன் நூற்றாண்டுவிழா நடைபெற்றது.
  விழாவிற்கு கல்லூரி அறங்காவலர் கவிதா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். வாசகர் பேரவைசெயலாளர் பேராசிரியர் விசுவநாதன் முன்னிலை வகித்தார்.  துறைத்தலைவர் தயாநிதி வரவேற்றார்.
இவ்விழாவில் அகிலன் உருவ படத்தை  ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். அனைவரும்  மலர்த்தூவி மரியாதையை செய்தனர்.
  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  கவிஞர் மு.முருகேஷ் பல்வேறு  போட்டிகளில் வெற்றிபெற்ற,  கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர்பேசியது  .அகிலன் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கவும்வாழ்ந்த தெருவிற்கு அவர் பெயரும் சூட்டவும் வேண்டும் , “சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் மற்றும் தமிழுக்கு முதன்முதலில் ஞானபீட விருது பெற்றுத்தந்த அகிலன் பிறந்த மாவட்டத்தில் நானும் பிறந்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்.
சில எழுத்தாளர்கள் அவர்களின் வாசகர்களால் போற்றப்படுவார்கள். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அவர்களின் உயரிய சமூக சிந்தனைக்காகப் போற்றப்படுவார்கள். அகிலனும் அவரின் சமூகம் சார்ந்த எழுத்துக்காகவே போற்றப்படுகிறார். உண்மையையும், நேர்மையையும் தன் எழுத்தின் தாரக மந்திரமாகக் கொண்டவர் அகிலன்.
மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை விட்டு எதைப் பிடிக்க வேண்டுமோ அதையே தான் எழுதியதாக அகிலன் சொல்கிறார். காந்திய சிந்தனை மீது அபார பற்று கொண்ட அகிலன், போலி காந்தியவாதிகளை சாடுவதையும் அவர் தவிர்த்ததில்லை. மாத நாவல் திட்டத்திற்கு அடித்தளமிட்டதோடு முதல் நாவலை எழுதிக் கொடுத்த பெருமையும் அவருக்கு உண்டு.
விமர்சனங்களை கண்டு அஞ்சியதில்லை. திரு.வி.க , பாரதி, கி.வா.ஜகந்நாதன் போன்றவர்களைக் கொண்டாடியவர் அகிலன்.ஞானபீட விருதைப்போல் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்றவர்.
இப்படி பல வேறு பெருமைகளைக் கொண்ட அகிலனுக்கு அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்டுவதோடு, அவர் வாழ்ந்த தெருவிற்கு அவர் பெயரையும் வைக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் பரசுராமன், புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவை செயலாளர் மாரிமுத்து  ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள் .
விழாவில் அகிலன் குடும்பத்தினர்  அங்கயர்க்கண்ணி, சிவகுருநாதன்,  வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மருத்துவர் ராம்தாஸ், அ.லெ.சொக்கலிங்கம், சத்தியராம்ராமுக்கண்ணு, பேரா. நாகேஸ்வரன், மற்றும் கவிஞர் தங்கம்மூர்த்தி, அழகு சுந்தரம் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். .. நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் லெ.அஞ்சலை நன்றிகூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top