Close
மே 20, 2024 1:38 மணி

கோபி பகுதி விவசாயிகளிடம் அதிக அளவில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்: செங்கோட்டையன் வலியுறுத்தல்

ஈரோடு

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் பகுதிகளில் தென்னை விவசாயிகளிடமிருந்து 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய  முன் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்தார்.

விலை ஆதார திட்டத்தின் கீழ் கோபி வேளாண்மை விற்பனை கிடங்கில் 300 மெட்ரிக் டன்னும் ஈரோடு மாவட்டத்திற்கு 4500 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யலாம் என்று அரசு இலக்கு நிர்ணயத்து நிலையில் இத்திட்டமானது திடீரென கடந்த 25 நாட்களாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து நிறுத்தப்பட்டுள்ளது

300 மெட்ரிக் டன் கோபிக்கு கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் வெறும் 75 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

மேலும் இதுவரை கொள்முதல் செய்த கொப்பரை தேங்காய்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் இருப்பு வைத்த கொப்பரைகளை உடனடியாக கொள்முதல் தொடங்கவும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு கோபி தென்னை விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பீட்டிலான இருக்கைகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன், அதேபோல நாமக்கல் பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்ககட்டிடத்தினை முன்னாள் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.ஏ. செங்கோட்டையன்  கூறியதாவது: கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் பகுதிகளில் தென்னை விவசாயிகளிடமிருந்து இந்த ஆண்டிற்க்கு 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்,

300 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட வேண்டிய இடத்தில் 75 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது

திமுக அரசு பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில் தேங்காய் நார் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது என மூடப்பட்டுள்ளது

இதனால் தேங்காய் மட்டைகள் விற்பனை செய்ய முடியாத சூழல் இருந்து வருகிறது.இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்

இந்தியாவிலேயே அதிகம் தென்னை மரங்களை வைத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அரசு விரைந்து அந்தப் பணிகளை செய்ய வேண்டும்

ஆகவே, 300 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.அதேபோல ஏப்ரல் மாதம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய்களுக்கு இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை. அதனையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றார் செங்கோட்டையன். யூனியன் சேர்மன் வழக்கறிஞர் மவுதிஸ்வரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top