Close
நவம்பர் 21, 2024 2:13 மணி

கொல்லிமலையில் முதியோருக்காக மொபைல் மெடிக்கேர் வாகனம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கொல்லிமலையில், முதியோருக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனத்தை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.கொல்லிமலையில் முதியோர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூத்த முடிமக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கவும் மற்றும் மருந்துகள் வழங்குவதற்காகவும், மூத்தகுடிமக்களுக்கான இல்லம் தேடி மருத்துவ உதவி திட்டத்தை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தேசிய செயல் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் நலம் கான மொபைல் மெடிக்கேர் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கொடியசைத்து மொபைல் மருத்துவ பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலர், மகளிர் திட்ட அலுவலர், கொல்லிமலை தாசில்தார், பிடிஓ மற்றும் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனத்தினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top