Close
மே 28, 2025 2:59 மணி

மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கல்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவைப்பருவத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, நிலுவைத் தொகை ரூ. 23.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கரும்புக்கான பணம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. நீண்ட நாட்களாக பணம் கிடைக்காமல் சிரமப்பட்ட விவசாயிகள் இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பல்வேறு அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும், தமிழக அரசுக்கு கரும்புக்கான பணத்தை வழங்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலதுறை அமைச்சர் பன்னீர் செல்வம், சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர், தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அதையடுத்து, 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை ரூ. 23.47 கோடி விவசாயிகளுக்கு விரைந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதையொட்டி, கரும்பு நிலுவைத் தொகை சமந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கிற்கு வங்கிகள் மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top