Close
மே 20, 2024 4:35 மணி

தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டே இல்லை; இனிமேலும் இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின்வாரியம்

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில் மின்சார தேவை குறித்து அண்ணா திமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல்மின் நிலையங்களில் பற்றாக்குறையை போக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டதை தொடர்ந்து, ஓரிரு நாள்களில் அந்த நிலக்கரி வந்துவிடும்.

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகையால், தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகாவாட் மின்சாரம் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு சீராக உள்ளது. மின்வெட்டு தற்போது இல்லை. இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது. நடப்பு கோடை காலத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் மின்சார உற்பத்தி, கொள்முதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 29.3.2022 தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 17,196 மில்லியன் வாட்டாக உயர்ந்தது. தினசரி மின்சாரம் நுகர்வு 380 மில்லியன் வாட்.

கூடுதல் மின் உற்பத்தி: மின் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் மே மாதம் தமிழ்நாட்டில் 1455 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்து வினியோகிக்கப்படும்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் எடுத்த சீர்திருத்தம் காரணமாக 20,391 மெகா வாட் மின்சாரம் இந்த ஒரே ஆண்டில் உற்பத்தி செய்து வினியோகிகப்படும். ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி 4837 மொகா வாட்டாக அதிகரிக்கும்.

இதுதவிர மிகக்குறைவாக ஒரு யூனிட் ரூ.2.65 என்ற குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கி வினியோகிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திடமிருந்தும் மின்சாரம் வாங்கி வினியோகிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அனல் மின்நிலைய மின் உற்பத்தி நிலையங்க ளுக்கு ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. இப்போது கையிருப்பு நிலக்கரி 48 ஆயிரம் டன் தான். நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க கூடுதலாக 4 லட்சம் டன் நிலக்கரி வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலக்கரியும் வாங்கி விட்டால் அனல் மின் நிலையங்க ளின் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். பின்னர் தமிழ்நாட் டில் மின்சாரப் பற்றாக்குறை வராது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top