Close
மே 20, 2024 2:12 மணி

பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ‘மஞ்சப்பை விருது’அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சட்டப்பேரவை

சட்டப்பேரவை

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அறிவித்தார்.
சட்டப்பேரவை
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தமிழக சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளைவெளியிட்டுஅத்துறையின் அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் பேசிய தாவது:

முதலமைச்சரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்து வதற்காக 25 பசுமை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.இந்த பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பை நடைமுறைப்படுத் துதல்.

மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகை தோட்டங்கள் உருவாக்குதல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் ஏனைய பசுமை பணிகளை இப்பள்ளிகள் மேற் கொள்ளும். பள்ளியின் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.

மேலும், இந்த பள்ளிகள் பசுமை திட்டங்கள் தொடர்பான தகவல் திரட்டை உருவாக்குவதற்காக பசுமை அட்டவணை யில் மதிப்பீடு செய்யப்படும். இந்த திட்டத்திற்காக தமிழக அரசால் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு செலவிடப்படும்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் தொடங்கி வைத்த  மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தி, அடிமட்ட அளவுக்கு கொண்டு செல்வதற்காக மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கண்காட்சி என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியில் இருந்து ரூ.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகங்களில் ஒன்றான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த திட்டத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை இணைந்து ரூ.25 கோடி செலவில் செயல்படுத்தும்.

மஞ்சப்பை விருது :தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்கு விக்க தமிழ்நாடு அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 10 இடங்களில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். சென்னையில் இளைஞர்களின் குத்துச்சண்டை ஆர்வத்தை ஊக்குவிக்க ரூ.2 கோடி செலவில் மற்றுமொரு குத்துச்சண்டை அகாதெமி அமைக்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் அனைத்து விளை யாட்டு விடுதிகளிலும் ஒரே வகையிலான விளையாட்டு சீருடைகள், உபகரணங்கள் மற்றும் சேவை கட்டணம் வழங்கப்படும்.

அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.38 லட்சமாக உயர்த்தி புதுப்பொலிவுடன் நடத்தப்படும்.

நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top