Close
ஜனவரி 30, 2025 9:45 மணி

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய விரிவான திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு,வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மினி பஸ்களுக்கான புதிய விரிவான திட்த்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அதிக குடியிருப்புகளைக் கொண்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. மேலும் தமிழகத்தில் மினி பஸ்களுக்கான கட்டண திருத்தம் வருகிற மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ ஆக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம், ரோட்டின் மொத்த நீளத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருக்கக் கூடாது.
  • தொடக்கம் மற்றும் முடியும் இடம் சேவை செய்யப்படாத கிராமத்தில் இருக்க வேண்டும்.
  • இதில் ஏதேனும் ஒன்று பஸ் ஸ்டாப் அல்லது பஸ் ஸ்டாண்டாக இருக்க வேண்டும்.
  • துவங்கும் இடத்தில் இருந்து அடுத்த 1 கி.மீ தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, கலெக்டர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அல்லது பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
  • மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள், ஆர்டிஓ அலுவலகங்கள் போன்றவை, மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில், சேவை பகுதியில் 1 கி.மீ வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம்.
  • மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.
  • பழைய மினி பஸ் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பர்மிட் பெற்ற பஸ் உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின்கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து பர்மிட்டை ஒப்படைக்க வேண்டும்.
  • இப்புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.
  • மினி பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கை தவிர்த்து, பயணிகள் இருக்கை 25 ஆக இருக்கவேண்டும்.
  • மேலும் மினி பஸ்சின் வீல்பேஸ் 390 செ.மீ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில், இந்த புதிய விரிவான திட்டத்தின்கீழ் மினி பஸ்கள் இயக்குவதற்கு, வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் அந்தந்த ஆர்டிஓ அலுவலரிடம் வரும் 31ம் தேதிக்குள் சம்ர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top