Close
மே 11, 2024 7:11 மணி

புத்தகம் அறிவோம்… இதயம் தொட்ட இலக்கியவாதிகள்…

நூல்அரங்கம்

புத்தகம் அறிவோம்

தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்களில் ஒருவர் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம். ஒரு எளிய விவசாயக்குடும்பத்தில் பிறந்து, புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் பதிப்புத் துறைக்கு வந்தவர்.

மதுரை அருகே மேலூரில் பிறந்து கோவையில் தடம் பதித்தவர்.அவர் அறியாத இலக்கியவாதிகளே இருக்க முடியாது. அவரை பெரிதும் மதிப்பவர்களில் இறையன்பும் ஒருவர்.

அவர் தான் நன்கு அறிந்த, பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்கள் மு.வரதராசனார், கு.அழகிரிசாமி, கவியரசர் கண்ணதாசன், ஜெயகாந்தன் , நா.பார்த்தசாரதி, கவிஞர் மீரா.சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான் , வ.விஜயபாஸ்கரன், பதிப்பாளர் ‘வானதி’ திருநாவுக்கரசு, அரசியல்வாதி, தொழிலதிபர் அருட்செல்வர் நா.மகாலிங்கம், பழனியப்பா பதிப்பகம் பழனியப்ப செட்டியார், சக்தி வை. கோவிந்தன் என்று 12 பேரைப் பற்றி அமுதசுரபி இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

வேலாயுதம் பதிப்புத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை மதிக்கும் வகையில் இந்த நூலை வானதி வெளியிட்டுள்ளதாக வானதி இராமநாதன் குறிப்பிடுகிறார்..இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் இறையன்பு” கொங்கு மண்டலத்தில் அவருடைய பங்களிப்பு வாசிப்பு உலகத்திற்கு உனதமானது. எப்படியெல்லாம் பதிப்பாளர்களோடும், வாசகர்களோடும் நேயத்தோடு நடந்த கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிற வரலாற்றுப் பதிவு இந்நூல் “என்கிறார்.

“பலர் கம்பீரமான ஜெயகாந்தனைப் பார்த்திருப்பார்கள். சிம்ம கர்ஜனை கொட்டும் அவரின் வார்த்தைகளையும், முறுக்கிய மீசையையும் பார்த்து கரடுமுரடாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவருக்குள் இருக்கும் குழந்தை மனசு, வெள்ளந்தியான அன்பு, பாமரனையும் நேசிக்கும் கனிவு அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்குத்தான் தெரியும்.
அது தான் அவரின் எழுத்தை வழிநடத்தி இன்றைக்கும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது” என்று ஜெயகாந்தனைப் பற்றி எழுதுகிறார் அய்யா வேலாயுதம்.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top