Close
மே 20, 2024 6:28 மணி

புதுக்கோட்டை அருகே சுவாமி வீதி உலா செல்ல பாதை: கிராம மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

,சாமி சப்பரத்தை சகதியிலும் வயலிலும் முள் காட்டிலும் பெரும் சிரமத்தோடு இழுத்துச்செல்லும் முத்துக்காடு கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின்போது சுவாமியை வீதி  உலா  கொண்டு செல்ல 50 ஆண்டு காலமாக பாதை இல்லாமல் உள்ள வரும் சூழலில், அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து பாதை அமைத்து தர வேண்டுமென அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயில் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது. இந்த கோயில் திருவிழாவின் போது சுவாமி வீதி உலா காட்சிக்காக கொண்டு செல்ல பாதை வசதி இல்லாமல் மேல முத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் மண்டகபடித்தார்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக  அவதிப்பட்டு வருகின்றர்.

புதுக்கோட்டை
சுவாமியை கொண்டு செல்லும் வயல்காட்டு பாதை

சுவாமி சப்பரத்தை  சேற்றிலும் வயலிலும் முள் காட்டிலும் பெரும் சிரமத்தோடு இழுத்து செல்லும் நிலை தொடர்கிறது. ஆகவே தங்களுக்கு பாதை வசதி  ஏற்படுத்தித்தர வேண்டுமென 50 ஆண்டு காலமாக மக்கள் பிரதிநிதிகள், முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர், அன்னவாசல் ஒன்றிய குழு தலைவர் என பலரிடம் கோரிக்கை  மனுக்கள்  அளித்தும் இதுநாள் வரை தீர்வு கிடைக்கவில்லை.

ஒவ்வொரு  ஆண்டும் இதே துயரத்தோடு ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு   பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் சுவாமியை வீதி  உலா கொண்டு செல்ல முறையான பாதை வசதி அமைத்து தர வேண்டும் எனவும் மேல முத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top