Close
மே 20, 2024 7:50 மணி

புதுக்கோட்டையில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட காமராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்கிறார், எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை நகரில் அதிகாலையில் திடீரென பெய்த கனமழையை தொடர்ந்து காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில்  மழைநீருடன் கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை  பெரியார் பகுதிகளில் மழைநீர் கால்வாயைத் தாண்டி கழிவு நீருடன் பிளாஸ்டிக் கழிவுகளும்  சாலையில் வெளியேறியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.

குறிப்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து எம்எல்ஏ அலுவலகம் வழியாக பெரியார் நகர் செல்லும் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள கால்வாய்களின்  ஓரம் அமைக்கப்பட்டுள கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது.  மேலும் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டு வரும் பூங்காவின் அடிப்பகுதியில் செல்லும் கழிவு நீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய  மழைநீர் அப்பகுதியில் தேங்கி நின்று குளம் போல சாலை காட்சியளித்தது.

புதுக்கோட்டை
பெரியார்நகர் செல்லும் சாலையில் பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நேரில்  பார்வையிட்டு மழை நீரை வெளியேற்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள் மூலம் சீரமைக் கும் பணியை விரைவு படுத்தினார்.இதில்,  நகர் மன்ற உறுப்பினர் லதா ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள்  இருந்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மரண பள்ளம்

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள் ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை வெயிலின் கொடுமையை போக்க அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கோடை மழை குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மழை வாய்ப்பு குறித்து அவ்வப்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இன்று 24 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top