Close
மே 20, 2024 9:21 மணி

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் புதிய பஸ் ஸ்டாப்: எம்.பி. அடிக்கல் நாட்டினார்..!

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு, ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டினார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல், மார்ச் 15-
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில், ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது அங்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைக்க, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையொட்டி மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

ராசிபுரம் தாலுகா, அத்தனூர் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த பழைய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையம் ரூ. 37.55 லட்சம் மதிப்பீட்டில் 105.41 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் அத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் இதர வேளாண் இடுப்பொருள்கள் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் புதிய கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட முகமை திட்ட இயக்குநர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top