Close
மே 17, 2024 2:06 காலை

மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியை 4 சதவீதம் அதிகரிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. மக்களவைத் தோ்தலையொட்டி வெளியான இந்த அறிவிப்பின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு பணியாளா்கள், ஓய்வூதியா்கள் பயன்பெறுவா்.

அமைச்சரவை முடிவுகள் தொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், விலைவாசி உயா்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு பணியாளா்களுக்கான அகவிலைப் படி மற்றும் ஓய்வூதியா்களுக்குகான அகவிலை நிவாரணம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தற்போதைய 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு மொத்தம் ரூ.12,869 கோடி செலவிடப்படும். இதனால், 2024-25 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.15,014 கோடி செலவாகும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10,372 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்தியா ஏஐ (செயற்கை நுண்ணறிவு) செயல்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புத்தாக்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்துறையினா் பயன்பெறுவா் என தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top