Close
மே 20, 2024 3:35 மணி

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை பணிகளை புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் நடந்த வேட்பு மனு பரிசீலனை பணிகளை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனை பணிகளை தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்களிடம் ஏதும் புகார்கள் உள்ளதா என்பது குறித்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜனிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை. வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா வழிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாகவும் புகார்கள் இருந்தால் உடனடியாக தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம்.

பண பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வழிமுறைகளையும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார் மோனிகா ராணா.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை  மாலை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.இரண்டு நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் உள்ள 189 பதவிகளுக்கு ஆயிரத்து 133 வேட்புமனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுக ளுக்கு வேட்புமனு பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சி பொருத்தவரை 42 கவுன்சிலர் பதவிக்கு 334 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 35-வது வாட்டு பாஜக வேட்பாளர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் என இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்டைகள் என மொத்தம் 332 பேர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை செய்து அவருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top