Close
மே 12, 2024 12:01 காலை

தஞ்சையில் டைட்டல் பார்க் கட்டுமான பணிகள்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

தமிழ்நாடு

தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

தஞ்சாவூர் அருகே மேல வஸ்தாச்சாவடி அருகில் டைட்டல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப் முன்னிலையில் தமிழ்நாடு டைட்டல் பார்க் மேலாண்மை இயக்குனர் ஜெயசந்திர பானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம்  (தஞ்சாவூர்), மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 3.40 ஏக்கர் பரப்பளவில்; 55,000 சதுர அடியில் ரூ 27.13 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டிடமாக இந்த டைட்டல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி ராஜா  இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, செயற்பொறியாளர் பாலாஜி, து.செல்வம், டி.அருளானந்த சாமி, வட்டாட்சியர் .அருள் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டைடல் பார்க்…முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டம் என்றால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம் “மினி டைடல் பார்க்” என்று கூறலாம். இவை இரண்டுமே தமிழகத்தில் ஐடி தொழில் நிறுவனங்களை தடம் பதிக்க செய்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சி ஆகும். டைடல் பார்க் என்ற பெயர் எப்படி வந்தது என்று யோசித்திருக்கிறீர்களா? தமிழக அரசின் TIDCO மற்றும் ELCOT ஆகியவற்றின் சுருக்கமே “TIDEL பார்க்” என்று அழைக்கப் படுகிறது.

தமிழகத்தின் முதல் டைடல் பார்க் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை, சென்னை பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் டைடல் பார்க் அமைந்துள் ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டைடல் பார்க் பணிகளை முன்னெடுத்தார்.

மு.க.ஸ்டாலின் திட்டம்..இவை சிறிய நகரங்களில் அமையும் சிறிய ஐடி பூங்காக்கள் என்பதால் ”மினி டைடல் பார்க்” என்றும், ”டைடல் நியோ” என்றும் அழைக்கப்படுகின்றன. இதனால் என்ன நன்மை கிடைக்கும் எனக் கேட்கலாம். இளைஞர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். சம்பந்தப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் முன்னேற்றம் காணும் எனக் கூறுகின்றனர்.

குறிப்பாக ஒரு நகரில் சர்வதேச தொழில் நிறுவனங்கள் வருகிறது என்றால் அதற்கான உயர்தர வசதிகளை மாநில அரசே செய்து தரும். இதைவிட வேறென்ன வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கி முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்றால் போதும் என்று தான் பலரும் நினைப்பர். தற்போது வரை விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இன்னும் ஒரு மாதம் தான்… குறிப்பாக விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 4 மாடிகள் கொண்டதாக காணப்படுகிறது. ஒட்டுமொத்த பணிகளும் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். மொத்தம் 63 ஆயிரம் சதுர அடி. இதில் ஐடி நிறுவனங்களை வாடகைக்கு விடும் பணிகள் தொடங்கிவிட்டன. விருப்பமுள்ள நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் ஐடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிடும்.

மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்… இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மீளாவிட்டான் கிராமத் திலும் மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அனைத்து மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகளையும் விரைவுபடுத் துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து சிறப்பான முறையில் ஐடி பூங்கா வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட் டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top