Close
மே 14, 2024 12:53 மணி

உறவினர்களால் அபகரிக்கப்பட்ட 4.50 ஏக்கர் பூர்வீக நிலத்தை மீட்டு தரக் கோரி எஸ்.பி.யிடம் மனு

ஈரோடு

உறவினர்களால் அபகரிக்கப்பட்ட 4.50 ஏக்கர் பூர்வீக நிலத்தை மீட்டு தரக் கோரி எஸ்.பி.யிடம் மனு!

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வடக்கு மூர்த்தி பாளையத்தை சேர்ந்த சண்முகம் (75), சம்பூர்ணம் (68) தம்பதியின் மகன் கவின்குமார். சண்முகம் சம்பூரணம் தம்பதியருக்கு சொந்தமான 3.68 ஏக்கர் பூர்வீக நிலம் சிவகிரி அருகே விளக்கேத்தியிலும், அதன் அருகே மேலும் 1 ஏக்கர் நிலம் என மொத்தம் 4.50 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை குத்தகைக்கு ஓட்டுவதாகக் கூறி என் தந்தையுடன் பிறந்த அக்கா பழனியம்மாள் மற்றும் அவரது கணவர் மணி ஆகியோர் ஏமாற்றி நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் செய்து கொண்டதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் ஈரோடு எஸ்.பி.யிடம் கவின்குமார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : எனது தந்தை சண்முகம் மனநலம் சரியில்லாதவர். நான் மூர்த்திபாளையத்தில் தங்கி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என்னை பார்த்துக் கொள்வதற்காக எனது தாயார் சம்பூரணம் வந்து விடுவார்.

நாங்கள் இருவரும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து எனது தந்தையாரிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு எனது அத்தையும் தந்தையின் அக்காவுமான பழனியம்மாளும் அவருடைய கணவர் மணியும் விளக்கேத்தியில் உள்ள எங்கள் பூர்வீக நிலமான 3.68 ஏக்கர் நிலம் என மொத்தம் 4.50 ஏக்கர் நிலத்தை 28 ஆண்டுகள் குத்தகைக்கு ஓட்டுவதாகக் கூறி வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து தான செட்டில்மென்ட் ஆகவும், 74 சென்ட் நிலத்தை எனது தந்தையார் சண்முகம் விற்பனை செய்து விட்டதாகவும் கூறி போலியாக பத்திரம் தயார் செய்து என் தந்தையார் சண்முகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டார்கள்.
இந்நிலையில் எனது தந்தையார் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமாகி விட்டார்.அதன் பின் எங்கள் நிலத்தின் பேரில் கடன் பெறுவதற்காக வங்கியை அணுகினோம். எங்கள் பத்திரத்தை கொடுத்த போது தான் அந்த நிலம் எனது அத்தையான பழனியம்மாள் அவரது கணவர் மணி ஆகியோரின் பெயருக்கு தான செட்டில்மெண்ட் ஆக நிலம் வாங்கியதாக பதிவாகியிருப்பது தெரிய வந்தது.

இதைப்பற்றி பழனியம்மாளிடமும் பணியிடமும் கேட்ட போது வெளி ஆட்களை வைத்து தகாத வார்த்தையால் மிரட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.எனது தந்தை மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும்போது அவருக்கே தெரியாமல் அவர் எங்களது சொத்தை எழுதி வாங்கிக் கொண்டார்கள்.
எனவே முறைகேடாக பதிவு செய்யப்பட்ட எங்களது நிலத்தை மீட்டுத்தரக் கூறியும், எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அவரது சாவில் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு எஸ்பி இடம் இன்று மனு கொடுத்துள்ளோம், என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top