Close
மே 10, 2024 6:48 காலை

கீழ்பவானி பாசனத் தந்தை” ஈஸ்வரன் பிறந்தநாளை கொண்டாடிய விவசாயிகள்

ஈரோடு

எம் ஏ ஈஸ்வரன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகளின் ஓகே நீர் ஆதாரமாக விளங்கி வருவது கீழ்பவானி எல்.பீ.பி. வாய்க்கால் ஆகும். மொத்தம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வரும் கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகரில் தொடங்கி மங்கலப்பட்டி மற்றும் முத்தூர் பகுதிகளில் நிறைவு பெறுகிறது.

மொத்தம் 200 நீளமுள்ள இந்த வாய்க்காலை நம்பிசுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் உள்ளன. இந்த வாய்க்கால் வெட்டு வதற்கு முன்பு வரையிலும் வானம் பார்த்த பூமியாக இருந்த விளை நிலங்கள் தற்போது நெல், வாழை, கரும்பு, மஞ்சள் என குறைந்தபட்சம் இரண்டு போகம் சாகுபடி செய்யும் விளைநிலங்களாக மாறிவிட்டன.

இந்த வாய்க்காலை அமைப்பதில் அப்போதைய ஈரோடு எம் எல் ஏ வும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான எம்.ஏ. ஈஸ்வரனின் பங்கு மிகவும் முக்கியமானது.கீழ் பவானி வாய்க்காலை அமைப்பதற்காக பாடுபட்ட எம்.ஏ. ஈஸ்வரனை கொங்கு நாட்டு மக்கள் “கீழ் பவானி பாசனத்தின் தந்தை” என்று அழைக்கிறார்கள்.

எம்.ஏ.ஈஸ்வரனின் பிறந்தநாள் விழாவை இன்று ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி இப்பகுதி விவசாயிகள் பொங்கல் வைத்தும், ஈஸ்வரனின் உருவ படத்துக்கு படையலிட்டு அவரது
உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தனர்.

பின்னர் கீழ்பவானி வாய்க்காலை வணங்கி எம் ஏ சி ஈஸ்வரனின் புகழ் ஓங்குக என கோஷமிட்டு மலர் தூவி கீழ்பவானி வாய்க்காலுக்கு மரியாதை செய்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செங்கோட்டையன், பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் முருங்கத்தொழுவு ரவி முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 சட்டப்பேரவை தொகுதிகளின் விவசாய ஆதாரமாகவும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் கீழ் பவானி வாய்க்காலை அமைத்துக் கொடுத்த எம் ஏ ஈஸ்வரனின் நினைவை போற்றும்வகையில் இந்த விழாவை அரசு விழாவாக ஏற்று நடத்த அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை எடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top