Close
மே 4, 2024 5:16 மணி

புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில்  பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

புதுகை மரம் நண்பர்கள் சார்பில் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா

உலக மகளிர் தினத்தையொட்டி புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில்  பெண் தபால்காரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மரம் நண்பர்கள்சார்பில்     உலக மகளிர் தினத்தை யொட்டி பெண்  தபால்காரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு  மருத்துவர்     ஜி .எட்வின் தலைமையில்  தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

தலைமைத் தபால் அலுவலர்  என்.லலிதா   அனைவரையும் வரவேற்றார்.

பெண்  தபால்காரர்கள்      ரம்யா ,  லட்சுமி,  நாகம்மாள், கிருத்திகா, ரேணுகாதேவி, உமாமகேஸ்வரி, பிரமாவதி, தேவி கோமதி உள்ளிட்டோருக்கு. மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் .சா.விஸ்வநாதன், பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி    வாழ்த்துகள் கூறி  பேசியதாவது:

பெண்  தபால்காரர்  தினந்தோறும், வெயில், மழை என்று எதையும் பாராமல் இல்லங்கள் தோறும், கடைகள் தோறும் சென்று தபால் விநியோகம் செய்கின்றனர். சிலர் சைக்களில் சென்று தபால் விநியோகம் செய்கின்றனர் அவர்களை  மரம் நண்பர்கள் சார்பில்   பாராட்டுகின்றோம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி அன்று, “சர்வதேச மகளிர் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.  இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது

சர்வதேச மகளிர் தினச் செயல்பாடுகளைத் திட்டமிடும்போது, ​​உங்கள் ஆண் நண்பர்கள் அல்லது சக தோழர்கள் விழாவில் கலந்துகொண்டு பாலின சமத்துவத்தை வென்றெடுக்க அழைப்பதையும் ஊக்குவிப்பதையும் உறுதிசெய்யுங்கள்.

பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும். வேலையில் பாலின சமத்துவத்தை நோக்கி பெண்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்ய, நல்ல பணிச்சூழலை உருவாக்குவது அவசியம்.

புதுக்கோட்டை
மரியாதை செய்யப்பட்ட பெண் தபால்காரர்கள்

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், உங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை ஆராய்ந்து,பணியாளர்களை பணியமர்த்து வதற்கான பயிற்சிகளை வழங்குதல், தலைமைப் பதவிகளில் பெண்களை முன்னிறுத்துவது, பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல், வணிகம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியலில் பெண்களைச் சமமாக மதித்தல், போன்ற கொள்கைகளை பணியிடங்களில் உருவாக்க வேண்டியது அவசியம் என்றார்கூறினார்.

விழாவில்  தபால்நிலையத்தில் பணியாற்றும் மற்ற  பெண் பணியாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது  .

இந்நிகழ்வில், மரம் நண்பர்கள் செயலர் ப.கண்ணன், உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், வழக்கறிஞர் பர்வின் பானு, பொறியாளர் ரியாஷ் கான் மற்றும் தபால்நிலைய அலுவலர்கள்  கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top