Close
மே 4, 2024 5:35 காலை

இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு மாசுக் கட்டுப்பாடு குறித்து ஜப்பான் குழு பயிற்சி

சென்னை

கடலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மாசுக் கட்டுப்பாடு குறித்த இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையின் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது

கடலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மாசுக் கட்டுப்பாடு குறித்த இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையின் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி சென்னையில் புதன்கிழமை நிறைவடைந்தது.  கடல் மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதில் ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பான் கடலோர காவல்படையிலிருந்து நான்கு பேர் கொண்ட சிறப்புக் குழு குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தது. இக்குழு இந்திய கடலோரக் காவல்படையின் வீரர்களுக்கு கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது, அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருள்களால் மாசுபடுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தது.

கடலோரக் காவல் படை தலைமையகம், கடலோர காவல் படை கிழக்கு மண்டலத்தைத் சேர்ந்த வீரர்கள் ஒருங்கி ணைக்கப்பட்டு இந்திய கடலோர காவல்படை வளாகத் தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சென்னை

தீங்கு விளைவிக்கும் அபாயகரமான பொருள்களைக் கை யாள்வதில் இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். இப்பயிற்சி யின் மூலம் இருதரப்பிலும் பல்வேறு புதிய உத்திகளை கற்றுக் கொள்ள முடிந்தது.   புதன்கிழமை கிழக்கு கடலோரக் காவல் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் பயிற்சி மையத்திற்கு  நேரில் வந்து  ஜப்பான் குழுவினர் பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுடன் கலந்துரையாடினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top